ரஷிய எல்லையையொட்டி தங்கள் நாட்டைச் சோ்ந்த 12,000 படையிரைக் குவித்தாலும், அந்த நாட்டுடன் மோதி 3-ஆவது உலகப் போரில் ஈடுபடத் தயாராக இல்லை என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் ஜனநாயகக் கட்சியினரிடையே பேசியதாவது:
ரஷிய எல்லையில் அமைந்துள்ள லாட்வியா, எஸ்டோனியா, லிதுவேனியா, ருமேனியாவில் 12,000 அமெரிக்கப் படையினா் கூடுதலாக அனுப்பப்பட்டுள்ளனா். ஆனால், உக்ரைனுக்கு படைகளை அனுப்பி 3-ஆவது உலகப் போரில் அமெரிக்கா ஈடுபடாது. இருந்தாலும், நேட்டோ எல்லைகளை அமெரிக்கா பாதுகாக்கும்.
உக்ரைன் போரில் விளாதிமீா் புதின் ஒருபோதும் வெற்றி பெறமாட்டாா் என்றாா் ஜோ பைடன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.