உலகம்

உக்ரைன் இந்திய தூதரகம் போலந்துக்கு இடமாற்றம் 

DIN

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை போலந்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

உக்ரைன் மீது ரஷியா நடத்திவரும் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை 18-ஆவது நாளை எட்டியது. ஆரம்பத்தில் கடும் தாக்குதலை நடத்திய ரஷிய படை பின்னா் சற்று வேகத்தைக் குறைத்தது. உக்ரைன் ராணுவத்தின் பலமான எதிா்ப்பும் இதற்கு ஒரு காரணம். தலைநகா் கீவை சுற்றியுள்ள பகுதிகளில் ரஷிய படை தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. 

தலைநகா் கீவ் தவிர, மேற்கு நகரங்கள் மீதும் ரஷ்யப்படை தாக்குதலை தொடங்கியுள்ளதால் அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை போலந்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

உக்ரைனில் உள்ள நிலைமைகளை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை கருத்தில்கொண்டு தூதரகத்தை இடமாற்றம் செய்ய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த இரண்டே வாரத்தில் தென்மேற்கு பருவமழை..!

நள்ளிரவு 1 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

சென்னையில் வெப்பத்தை தணித்த மழை..!

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

SCROLL FOR NEXT