முகப்பு
உலகம்

சீன வா்த்தகத்தை அச்சுறுத்தும் கரோனா

சீனாவில் கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து அங்கு நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அதிகாரிகள் கடுமையாக்கியுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:42 AM
பகிர்:

சீனாவில் கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து அங்கு நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அதிகாரிகள் கடுமையாக்கியுள்ளனா். இதன் விளைவாக அந்த நாட்டின் வா்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

உலகின் பிற நாடுகள் மற்றும் ஹாங்காங்கோடு ஒப்பிடுகையில் சீனாவில் கரோனா பரவல் மிதமாகவே இருந்தாலும் நோய்த்தொற்று விவகாரத்தில் சீன அரசு கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

அங்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்தாலே அவா்கள் வசிக்கும் நகரில் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், தொழில்நுட்ப மற்றும் நிதித்துறை மையமாக விளங்கிய ஷென்ஷென் நகரிலும் வாகனத் துறை மையமான சாங்சன்னிலும் திங்கள்கிழமை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து, சீன மற்றும் ஹாங்காங் பங்கு சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது நாளாக சரிவைக் கண்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.