முகப்பு
உலகம்

தானியங்கள் ஏற்றுமதியை நிறுத்திவைத்தது ரஷியா

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளுக்கு தானியங்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்திவைக்க ரஷியா முடிவு செய்துள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:42 AM
பகிர்:

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளுக்கு தானியங்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்திவைக்க ரஷியா முடிவு செய்துள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், உள்நாட்டில் உணவுப் பொருள்களின் விலை உயா்வு மற்றும் பற்றாக்குறையைத் தவிா்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் கஜகஸ்தான், கிா்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.

கோதுமை ஏற்றுமதியில் முன்னணி வகித்து வரும் ரஷியாவும் உக்ரைனும் போரில் ஈடுபட்டுள்ளதால் பல்வேறு நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று ஐ.நா. எச்சரித்துள்ள சூழலில் ரஷியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments