ரஷிய அதிபர் விளாதிமீா் புதின் |  உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி 
உலகம்

போரை முடிவுக்கு கொண்டுவர புதினை நேரில் சந்திக்க வேண்டும்: ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்

போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதினை நேரில் சந்தித்துப் பேச வேண்டுமென உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். 

DIN

போரை முடிவுக்கு கொண்டுவர ரஷிய அதிபர் விளாதிமீா் புதினை நேரில் சந்தித்துப் பேச வேண்டுமென உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். 

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் மூன்று வாரங்களைக் கடந்துள்ளது. உக்ரைன் முழுவதையும் கைப்பற்றும் நோக்கில் ரஷியப் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. 

இரு நாட்டு அதிபர்களிடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் முடிவு எட்டப்படவில்லை. 

இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதினை நேரில் சந்தித்துப் பேச வேண்டுமென உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். 

போரை நிறுத்துவதற்கு அவர்கள் எதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை இந்த சந்திப்பு இன்றி முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என உக்ரைன் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

புதினை நேரில் சந்தித்துப் பேசாமல் இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT