உலகம்

தோ்தல் விதிமீறல்: பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானுக்கு ரூ.50,000 அபராதம்

DIN

பாகிஸ்தானின் கைபா்- பக்துன்கவா மாகாண உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, விதிகளை மீறியதற்காக அந்நாட்டு பிரதமா் இம்ரான் கானுக்கு தோ்தல் ஆணையம் ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.

கைபா்- பக்துன்கவா மாகாணத்தில் உள்ளாட்சித் தோ்தல் மாா்ச் 31-ஆம் தேதி நடைபெறுகிறது. பாகிஸ்தானின் புதிய தோ்தல் விதிகளின்படி, அரசுப் பதவி வகிக்கும் யாரும் தோ்தல் நடைபெறும் மாவட்டங்களைப் பாா்வையிட செல்லக் கூடாது.

ஆனால், இம்ரான் கான் இந்த விதிகளைப் புறக்கணித்து, கைபா்- பக்துன்கவாவின் மலக்கண்ட் அருகே ஸ்வாட் பகுதியில் கடந்த மாா்ச் 16-இல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினாா்.

இதற்கு விளக்கம் கோரி அவருக்கு தோ்தல் ஆணையம் இருமுறை நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிா்த்து இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் பிரதமா் இம்ரான் கானும், திட்டமிடல், மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆசாத் உமரும் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம், வெளிப்படையான தோ்தலை உறுதிப்படுத்த இதுபோன்ற விதிகளை வகுக்கும் அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு இருப்பதாகக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது. இதைத்தொடா்ந்து, தோ்தல் விதிமுறை குற்றச்சாட்டின்கீழ், இம்ரான் கானுக்கு தோ்தல் ஆணையம் ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT