உலகம்

ஒரே நம்பிக்கையுடன் உக்ரைன் - போலந்து எல்லையை கடக்கும் மக்கள்

DIN


உக்ரைனில் போர் நின்று விடும் என்ற நம்பிக்கையோடு நாட்டிலேயே தங்கியிருந்தவர்களும்கூட, தங்களது நம்பிக்கையை இழந்து, தற்போது அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள்.

உக்ரைன் - போலந்து எல்லைப் பகுதியில் தங்களது குறைந்தபட்ச உடைமைகளுடன் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியுடன் அவர்கள் எல்லையைக் கடக்கும் போது ஒரே ஒரு நம்பிக்கை மட்டும்தான் அவர்களை வழிநடத்துகிறது. அதுதான், நிச்சயம் ஒரு நாள் சொந்த நாட்டுக்கு திரும்புவோம் என்பதே.

போர் தொடங்கிய போது ஆயிரக்கணக்கானோர் தங்களது நாடுகளை விட்டு வெளியேறிய நிலையில், பலரும் நிலைமை விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கையோடு அங்கேயே தங்கியிருந்தனர். ஆனால் நிலைமை சீரடையாமல் உணவுக்குக் கூட தட்டுப்பாடு ஏற்பட்டதால், போலந்து நோக்கி தங்களது பணத்தைத் தொடங்குகிறார்கள்.

நடைப்பயணமாகவோ அல்லது கார்கள் மூலமாகவோ பலரும் போலந்தை அடைகிறார்கள். போலந்து எல்லைப் பகுதியை நோக்கி வருபவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள், வயதானவர்களாகத்தான் இருக்கிறார்கள். உக்ரைனிலிருந்து ஆண்கள் வெளியேற தடை விதித்திருப்பதால், பெண்களும் குழந்தைகளும் மட்டுமே எல்லையை தாண்டுகிறார்கள்.

போலந்தின் மெடிகா மற்றும் ஷேய்னி போன்ற கிராமங்களில் தஞ்சமடைகிறார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT