உலகம்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஓராண்டுக்குப் பின் திரும்பிய அமெரிக்கர்: ரஷிய விண்கலத்தில் பூமியை அடைந்தார்

DIN

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 355 நாள்கள் தங்கியிருந்து பணியாற்றிய அமெரிக்க விண்வெளி வீரர் மார்க் வேன்ட் ஹே (55) ரஷிய விண்கலத்தில் புதன்கிழமை பூமி திரும்பினார்.
 அவருடன் ரஷிய விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த அன்டன் ஸ்காப்லெரோவ், பீட்டர் டப்ரோவ் ஆகியோரும் பூமிக்கு திரும்பினர்.
 இவர்களில் டப்ரோவும் மார்க் வேன்ட் ஹையை போலவே சுமார் ஓராண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 கடந்த ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மார்க் வேன்ட் ஹே சென்றார். அங்கு 355 நாள்கள் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில், தனது விண்வெளி பயணத்தை நிறைவு செய்துகொண்டு, ரஷிய விண்கலமான சோயுஸ் எம்எஸ்-19-இல், அவர் புதன்கிழமை பூமி திரும்பினார். ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் அங்கமாக இருந்த கஜகஸ்தானில் அந்த விண்கலம் தரையிறங்கியது.
 உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், ரஷிய விண்கலத்தில் மார்க் வேன்ட் ஹே பூமி திரும்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதாதேவிக்கு கோயில் கட்டுவோம்: அமித் ஷா

எதிர்நீச்சல் நடிகர்களின் சங்கமம்!

400 தொகுதிகளை வென்றால்தான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

SCROLL FOR NEXT