உலகம்

இலங்கையில் தெருவிளக்குகளை அணைக்க முடிவு

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தெருவிளக்குகளை அணைக்க முடிவு செய்திருப்பதாக  மின்சாரத்  துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்,

DIN

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தெருவிளக்குகளை அணைக்க முடிவு செய்திருப்பதாக  மின்சாரத்  துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்,

இலங்கையில் இறக்குமதியாகும் பொருள்களுக்கு செலுத்த வேண்டிய அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற எரிபொருள்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த நாட்டில் பெரும்பாலும் நீா்மின்சாரமே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது மழை குறைவாக பெய்ததால் நீா் மின்நிலையங்கல் முழுவீச்சில் செயல்படாமல் உள்ளன.

அனல் மின்சாரத்துக்குத் தேவையான எரிபொருள்களுக்கு இலங்கை இறக்குமதியையே நம்பியுள்ளது. இதனால், அனல் மின் நிலையங்களிலிருந்தும் போதிய அளவில் மின் உற்பத்தி செய்ய முடியவில்லை.

இதன் காரணமாக, நேற்று புதன்கிழமை முதல் நாடு முழுவதும் 10 மணி நேர மின்வெட்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், கையிருப்பில் இருக்கும் எரிபொருளை சேமிக்கும் பொருட்டும் மின் தடையைக் குறைப்பதற்கும் இரவு நேரங்களில் எரியும் தெருவிளக்குகளை அணைக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம் என மின்சாரத் துறை அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது, இலங்கையில் 10 மணி நேர மின்வெட்டு 13 மணி நேரம் வரை நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT