உலகம்

ரஷியப் படையெடுப்பால் உக்ரைனில் இதுவரை 3,153 பேர் பலி: ஐநா

DIN

ரஷியத் தாக்குதலில் இதுவரை உக்ரைனில் 3,153 பேர் பலியாகியுள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

ரஷியப் படைகள் உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கி 2 மாதங்களைக் கடந்துள்ளது. போரில் உக்ரைனுக்கு அதிக சேதங்களை உருவாக்கியுள்ள ரஷியா தொடர்ந்து அந்நாட்டின் முக்கியப் பகுதிகளைக் குறிவைத்துக் கைப்பற்றி வருகிறது.

குறிப்பாக, மரியுபோல் போன்ற முக்கிய நகரங்கள்  முழுமையாக ரஷியாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

சில நாள்களுக்கு முன் உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியப் படைகள் 2 ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததுடன் சில அடுக்குமாடிக் கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்தது. ‘

இந்நிலையில், போர் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை ரஷியாவின் தாக்குதலில் உக்ரைனைச் சேர்ந்த 3,153 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கீவில் போர் துவங்கியதிலிருந்து இதுவரை பலியானவர்களில் 1,150 பேரின் உடலை மீட்டுள்ளதாக உக்ரைன் காவல்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT