உலகம்

பள்ளி, கல்லூரி நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு: இங்கல்ல, ஷாங்காயில்

DIN

ஷாங்காயில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில மாதங்களாக வா்த்தக தலைநகர் ஷாங்காயில், தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக ஐந்து வாரங்களுக்கும் மேலாக பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வையும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. கல்லூரி தேர்வுகள் ஜூலை 7 முதல் 9 வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த நுழைவுத்தேர்வில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். 

ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெற உள்ள உயர்நிலைப் பள்ளி நுழைவுத்தேர்வில் சுமார் 1,10,000 மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். 

கரோனா தொற்றின் தீவிரம் காரணமாக ஷாங்காயில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT