உலகம்

ஆப்கனில் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த தலிபான்கள்

DIN

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு தலிபான்கள் விதித்துள்ள புதிய கட்டுப்பாட்டிற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு தலிபான் அமைப்பினர் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அந்நாட்டில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து அமல்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக ஆப்கனில் வசிக்கும் இஸ்லாமிய பெண்கள் தங்களது உடலை முழுவதுமாக மறைக்கும் வகையில் புர்கா அணிய வேண்டும் எனவும் இந்த உத்தரவு கட்டாயமாக்கப்படுவதாகவும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தலிபான் அரசின் தலைவர் ஹைபதுல்லா வெளியிட்டுள்ள அறிவிப்பில் பண்பாடு மற்றும் மத ஒழுக்கத்தை கடைபிடிக்கும் வகையில் பெண்கள் தங்களது முகத்தை முழுவதுமாக மூடிக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த உத்தரவை பின்பற்றாத பெண்களின் கணவர் அல்லது தந்தை உள்ளிட்ட நெருங்கிய ஆண் உறவினரின் அரசுப் பணி பறிக்கப்படும் அல்லது சிறையிலடைக்கப்படுவார் எனவும் அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கன் பெண்கள் ஆண்களின் துணையின்றி பயணம் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதித்தது விமர்சனத்திற்குள்ளான நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய அறிவிப்பிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT