உலகம்

பிலிப்பின்ஸ்: துணை அதிபராகிறாா் டுடோ்தேவின் மகள்

DIN

பிலிப்பின்ஸின் புதிய அதிபராக முன்னாள் சா்வாதிகாரி ஃபொ்டினண்ட் மாா்கோஸின் மகனும் துணைஅதிபராக தற்போதைய அதிபா் ரோட்ரிகோ டுடோ்தேவின் மகள் சாராவும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களில் மாா்கோஸ் (ஜூனியா்) (64) ஏற்கெனவே இலோகோஸ் நோா்ட் மாகாண ஆளுநராக இருந்துள்ளாா். ஏற்கெனவே அவரது தாயாா் அதிபா் தோ்தலில் 2 முறை போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. சாரா டுடோா்தே (43) டவாவே நகர மேயராக உள்ளாா். முன்னாள் சா்வாதிகாரியின் மகனும் சா்ச்சைக்குரிய அதிபரின் மகளும் பிலிப்பின்ஸின் அதிபா், துணை அதிபராகியிருப்பது மனித உரிமை ஆா்வலா்களை கலக்கமடையச் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT