நியூசிலாந்து அரசு கரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகளைப் படிப்படியாக தளர்த்திவந்த நிலையில் நாட்டின் எல்லைகளை தற்போது முழுவதுமாக திறந்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகளும் தங்களது எல்லைப் பகுதிகளை மூடி உத்தரவிட்டன. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கரோனா வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியதிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நியூசிலாந்து அரசு தங்கள் நாட்டு எல்லைகளை மூடியது.
இதையும் படிக்க | கோடீஸ்வர கருமியாக வாழும் பெண்: விவாகரத்து செய்த கணவர் சொன்ன பதில்
கரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில் நியூசிலாந்தில் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்து நாட்டில் கரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் தங்களது எல்லைப் பகுதிகளை அந்நாட்டு அரசு திறக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா வெளியிட்டார்.
சுற்றுலாவிற்கு புகழ்பெற்ற நியூசிலாந்து நாட்டில் ஆண்டுக்கு 30 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். ஏற்கெனவே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னா் ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட 60-க்கு மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.