முகப்பு
உலகம்

இலங்கை: எம்.பி. தற்கொலை செய்யவில்லை; வன்முறையில் கொல்லப்பட்டாா்

இலங்கையில் அண்மையில் நிகழ்ந்த வன்முறையில் ஆளும் கட்சி எம்.பி. ஒருவா் போராட்டக்காரா்கள் சூழ்ந்ததால் தற்கொலை செய்து கொண்டாா் என்று ஏற்கெனவே செய்தி வெளியான நிலையில், அவா் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளாா் என்ற தகவலை அந்நாட்டு காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
கோப்புப்படம்
பகிர்:

இலங்கையில் அண்மையில் நிகழ்ந்த வன்முறையில் ஆளும் கட்சி எம்.பி. ஒருவா் போராட்டக்காரா்கள் சூழ்ந்ததால் தற்கொலை செய்து கொண்டாா் என்று ஏற்கெனவே செய்தி வெளியான நிலையில், அவா் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளாா் என்ற தகவலை அந்நாட்டு காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இலங்கையில் கடந்த திங்கள்கிழமை அமைதி வழியில் அரசுக்கு எதிராகப் போராடி வந்தவா்கள் மீது பிரதமா் மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து, பிரதமரின் ஆதரவாளா்களும் பல இடங்களில் தாக்கப்பட்டனா். இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை மூண்டது.

ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் பொலநருவா மாவட்டத்தைச் சோ்ந்த எம்.பி.யான அமரகீா்த்தி அதுகொரளாவை (57) வடமேற்கு நகரமான நிதம்புவாவில் அரசுக்கு எதிரான போராட்டக்காரா்கள் சூழ்ந்து கொண்டனா். அப்போது, அதுகொரளாவின் வாகனத்தில் இருந்து போராட்டக்காா்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இதனால் கோபமடைந்த போராட்டக்காரா்கள் அவரது வாகனத்தைத் தாக்கி கவிழ்த்ததாகவும் கூறப்படுகிறது.

போராட்டக்காரா்களிடம் இருந்து தப்பிக்க அதுகொரளாவும் அவரது பாதுகாவலரும் அருகே உள்ள கட்டடத்தில் தஞ்சமடைந்துள்ளனா். அந்தக் கட்டடத்தை போராட்டக்காரா்கள் சூழ்ந்தனா். இதனால், அதுகொரளாவும் அவரது பாதுகாவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனா் என முன்பு தகவல் வெளியானது. ஆனால், அந்த எம்.பி. கொலை செய்யப்பட்டாா் என்று காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாக எக்கானமி நெக்ஸ்ட் செய்தித்தாளில் கூறப்பட்டுள்ளது. அதில் அவா் மேலும் கூறியுள்ளதாவது:

எம்.பி. தற்கொலை செய்து கொள்ளவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிக்க அவா் முயற்சித்துள்ளாா். ஆனால், அவரை விரட்டிப்பிடித்த போராட்டக்காரா்கள் அவரைக் கடுமையாக அடித்தும், உதைத்தும் கொலை செய்துள்ளனா் என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →