உலகம்

மகிந்த ராஜபட்சவை கைது செய்ய உத்தரவிடக்கோரி கொழும்பு நீதிமன்றத்தில் மனு

DIN

இலங்கை வன்முறைக்குக் காரணமான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய உத்தரவிடக்கோரி கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் மக்கள் போராட்டம் தொடர்ந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை பிரதமர் மகிந்த ராஜபட்ச பதவி விலகினார். 

இதையடுத்து, அன்றைய தினம் திங்கள்கிழமை போராட்டக்காரர்கள் மீது ராஜபட்ச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த, ஆத்திரமடைந்த மக்கள் ராஜபட்சவின் வீட்டிற்கு தீ வைத்தனர். இந்த வன்முறையில் 9 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். 

இதனிடையே, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க (73) வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். 

இந்நிலையில் இலங்கை வன்முறைக்குக் காரணமான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச, அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபட்ச, ஜான்சன் பெர்னான்டோ, பவித்ரா வன்னியாரச்சி, சி பி ரத்னாயக், சனத் நிஷாந்தா, சஞ்சீவா எதிரிமன்னே ஆகிய 7 பேரையும் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் கொழும்பு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். 

இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மகிந்த ராஜபட்ச மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படைத் தளத்தில் தங்கியிருப்பதும் மகிந்த ராஜபட்ச உள்ளிட்ட 7 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT