உலகம்

விளாதிமிர் புதினுக்கு ரத்தப் புற்றுநோய்: கசியும் ரகசியங்கள்?

ENS

கீவ்: ரஷிய அதிபர் பதவியிலிருந்து விளாதிமிர் புதினைக் கவிழ்ப்பதற்கான சதி ஏற்கனவே நடந்து கொண்டிருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் போரில் ரஷியா தோற்கும் என்றும் உக்ரைனின் உளவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் கைரைலோ புதனோவ் கூறியதாக டெய்லி மெயில் வெளியிட்டிருக்கும் செய்தியில், உக்ரைன் - ரஷிய போரில் இந்த கோடைக்குள் ஒரு திருப்புமுனை உருவாகும். விரைவில் ரஷிய அதிபர் அலுவலகத்திலிருந்து புதின் வெளியேற்றப்படுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாத இரண்டாம் பாதியில் ஒருமிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று புதனோவ் கூறியதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரமா போர் இந்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வரும். இதன் தொடர்ச்சியாக ரஷிய அதிபர் பதவியிலும் மாற்றம் ஏற்படும். அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்றும், ரஷியாவில் இயங்கும் அமைப்பு ஒன்று, புடின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாகவும், அவர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருப்பதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

ரத்த புற்றுநோயால் புதினுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டு, அதனால் அவதிப்பட்டு வருவதாக கிரெம்லினுடன் நெருங்கிய தொடர்பிலிருக்கும் தன்னார்வல அமைப்பு தெரிவித்திருப்பதாக இவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு துவக்கம் முதலே புதினின் உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. வழக்கமான முகம் சற்று பெரிதாகக் காணப்பட்டதால், அவரது உடல் நலக்குறைவுக்கு ஸ்டீராய்ட் வகை மருந்து எதையோ எடுத்துக் கொள்வது காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மசினகுடியில் ரேஷன் கடையின் ஷட்டரை மீண்டும் உடைத்த காட்டு யானை

காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்: கடைகளுக்கு அபராதம் விதிப்பு

அதிக மகசூலுக்கு கோடைஉழவு மேற்கொள்ள அறிவுறுத்தல்

குன்னூா்-கோத்தகிரி  சாலையில்   மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பலா பழங்களை ருசிக்கும் யானை

SCROLL FOR NEXT