கோப்புப்படம் 
உலகம்

உள்நாட்டு உணவுத் தேவைக்கு ஆதரவு கொடுக்க மங்கோலிய அதிபர் உறுதி

மங்கோலியாவின்  உணவுத் தேவையை பூர்த்தி செய்ய  உள்நாட்டு உணவு உற்பத்தியாளர்களுக்கு போதிய ஆதரவு அளிக்கும் என அந்நாட்டு அதிபர் உக்னா குரேல்சுக் உறுதி அளித்துள்ளார்.

DIN

மங்கோலியாவின்  உணவுத் தேவையை பூர்த்தி செய்ய  உள்நாட்டு உணவு உற்பத்தியாளர்களுக்கு போதிய ஆதரவு அளிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் உக்னா குரேல்சுக் உறுதி அளித்துள்ளார்.

மங்கோலியாவின் தலைநகர் உலான் பட்டோரின் புறநகர் பகுதிகளில் உள்ள காய்கறி உற்பத்தியாளர்களிடம் பேசிய குரேல்சுக், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துத் தருவதாக உறுதியளித்தார். மேலும், குளிர்சாதனப்பெட்டி வசதிகளுடன் கூடிய சேமிப்புக் கிடங்கு அமைத்து தரப்படும் எனத் தெரிவித்தார்.

மங்கோலியா தனது காய்கறித் தேவைகளை கிட்டத்தட்ட 40 சதவிகிதம் இறக்குமதி மூலமாகவே பெறுகிறது. இதனை அதிபரின் செய்தித் தொடர்பு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் அதிபர் குரேல்சுக் தேசிய அளவிலான உணவு உற்பத்தி கூடங்கள் அமைப்பதற்கான பிரசாரத்தினை தொடங்கி வைத்தார். மங்கோலியாவை உணவு ஏற்றுமதி செய்யும் நாடாக மாற்றுவதே இந்த பிரசாரத்தின் நோக்கமாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT