மேலாடை அணியாமல் கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் பெண் போராட்டம் 
உலகம்

மேலாடை அணியாமல் கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் பெண் போராட்டம்

இதனால், திரைப்பட விழாவில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பின்போது, பெண் ஒருவர் மேலாடை அணியாமல் தனது உடலில் உக்ரைன் கொடியின் வண்ணங்களை வரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற திரைப்பட விழாவில், 'எங்களை பாலியல் வன்கொடுமை செய்வதை நிறுத்துங்கள்' என ஒற்றை பெண்ணாக அவர் கோஷம் எழுப்பியது உலக அரங்கை அதிரவைத்துள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அழைத்து செல்வதற்கு முன்பு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக அங்கிருந்த புகைப்பட கலைஞர்களுக்கு அவர் மேலாடை இன்றி போஸ் கொடுத்தார்.

அந்த நேரத்தில், ஜார்ஜ் மில்லர் இயக்கிய 'ஆயிரம் ஆண்டுகளாக காத்திருக்கிறேன்' என்ற படத்தை பார்க்க நடிகர்கள் டில்டா ஸ்விண்டன், இட்ரிஸ் எல்பா ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பில் வந்து கொண்டிருந்தனர். ஆனால், உக்ரைன் பெண் நடத்திய போராட்டம் காரணமாக சிவப்பு கம்பள வரவேற்பில் விருந்தினர்களின் அணிவகுப்பு சற்று நேரம் தடைபட்டது. 

ரஷிய துருப்புகள் ஆக்கிரமித்த பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதாக கடந்த மாதம் விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் வந்ததாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்திருந்தார். 

செவ்வாய்கிழமை நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட தொடக்க விழாவில், உக்ரைனுக்கு உதவி அளிக்கும்படி விடியோ மூலம் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார். போரை கருப்பொருளாக வைத்து இந்த திரைப்பட விழா நடத்தப்பட்டுவருகிறது. 

லித்துவேனியா நாட்டை சேர்ந்த இயக்குநரான மந்தாஸ் குவேதரவிசியஸ் இயக்கிய 'மரியுபோலிஸ் 2' என்ற ஆவணப்படம் வியாழக்கிழமையன்று திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இவர், கடந்த மாதம், ரஷியா படைகளால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT