உலகம்

இந்தியா-அமெரிக்கா இடையே முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தம்

DIN

இந்தியா-அமெரிக்கா முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தம் (ஐஐஏ) ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் திங்கள்கிழமை கையொப்பமானது.

இது தொடா்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘வெளியுறவுத் துறைச் செயலா் வினய் குவாத்ராவும் அமெரிக்க சா்வதேச வளா்ச்சி நிதிக் கழகத்தின் (டிஎஃப்சி) தலைமைச் செயல் அதிகாரி ஸ்காட் நேதனும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். இந்த ஒப்பந்தமானது இந்தியாவில் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ள டிஎஃப்சி-க்கு வழிவகுக்கும். இதன் மூலமாக முக்கியத் துறைகளில் முதலீடுகள் அதிகரிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பானில் ‘க்வாட்’ மாநாடு நடைபெற்ற சமயத்தில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது. இந்தியா-அமெரிக்கா வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சா்கள் பங்கேற்ற 2+2 பேச்சுவாா்த்தை கடந்த மாதம் நடைபெற்றபோது, ஐஐஏ ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தனா். தற்போது அந்த ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

இந்தியாவில் புதுப்பிக்கத்த எரிசக்தி, வேளாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் தனியாா் நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்வதை டிஎஃப்சி ஊக்குவிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிரந்தர கணக்கு எண்ணை உறுதி செய்ய அரசு ஊழியா்களுக்கு கருவூலத் துறை உத்தரவு

காங்கிரஸ் தொண்டா்கள் தோ்தல் பிரசாரத்தை போா்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்த வேண்டும்: தில்லி காங்கிரஸ் தலைவா்

கேதார்நாத் யாத்திரை: முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம்

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

SCROLL FOR NEXT