உலகம்

இலங்கைக்கு உதவும் இந்தியாவின் செயல் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும்

DIN

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறி வரும் இலங்கைக்கு இந்தியா பொருளாதார ரீதியிலும், மனிதாபிமான அடிப்படையிலும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்தியாவின் இந்த உதவிகளை வரலாறு பேச வேண்டும்.

இந்தியாவின் இந்த தன்னலமற்ற உதவியினை உலக நாடுகள் பலவும் வெகுவாகப் பாராட்டி வருகின்றன. மேலும், இந்தியாவின் இந்த செயல் இலங்கை-இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்தும். கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கைக்கு இந்தியா செய்து வரும் உதவிகள் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும்.

இந்தியா இலங்கைக்கு பல கோடி ரூபாய் பொருளாதார உதவி செய்துள்ளது. அதேபோல மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு எரிபொருள், உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றையும் அனுப்பியுள்ளது.

இந்திய தரப்பிலிருந்து இதுவரை இலங்கைக்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல், அரிசி, பால் பவுடர் மற்றும் மருந்துகள் போன்றவைகளை அனுப்பியுள்ளது. அதேபோல இலங்கைக்கு கடனுதவியையும் வழங்கியுள்ளது இந்தியா.

இந்தியாவின் தரப்பில் மனிதாபிமான அடிப்படையில் பொருள்கள் அனுப்பும் அதே வேளையில் இலங்கை அரசு அதன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT