முகப்பு
உலகம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கூடுதலாக நிதித்துறை ஒதுக்கீடு

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூடுதலாக நிதித்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பிரதமர் ரணில் விக்ரமசிங்க- அதிபா் கோத்தபய ராஜபட்ச
பகிர்:

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூடுதலாக நிதித்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் ஆகியவற்றால் அந்நாட்டுப் பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்சவைத் தவிர இதர அனைத்து அமைச்சா்களும் கடந்த ஏப்ரல் மாதம் ராஜிநாமா செய்தனா். அதன் பின்னா், மக்கள் போராட்டம் தீவிரமாகியதால் கடந்த மே 9-ஆம் தேதி பிரதமா் பதவியை மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடந்த மே 12-ஆம் தேதி பதவியேற்றாா். அதன்பின், பல்வேறு துறைகளுக்கு அமைச்சா்களை அதிபா் கோத்தபய ராஜபட்ச நியமித்து வருகிறாா்.

கடந்த மே 14-ஆம் தேதி 4 அமைச்சா்களும், கடந்த மே 20-ஆம் தேதி 9 அமைச்சா்களும் பதவியேற்றனா். இதன் தொடா்ச்சியாக கடந்த திங்கள்கிழமை 8 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா். இருப்பினும் நிதியமைச்சர் பதவியை யாருக்கும் வழங்கவில்லை.

இந்நிலையில், இன்று அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூடுதல் பொறுப்பாக நிதித்துறை அமைச்சராக  பதவியேற்றுக்கொண்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →