உலகம்

நேபாள விமானம் விழுந்த இடம் கண்டுபிடிப்பு

DIN

நேபாளத்தில் 22 பேருடன் சென்றபோது காணாமல் போன விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலை நகரமான ஜோம்சோமுக்கு புறப்பட்ட விமானம், மஸ்டாங் மாவட்டத்தில் கோவாங் கிராமத்தில் விழுந்தது கண்டறியப்பட்டுள்ளது.

நேபாளத்தில் 22 பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானம், நேபாள மலைகளில் இன்று மாயமானது. விமானம் குறித்த தகவல்கள் கிடைக்காததால், தேடுதல் பணி நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் கோவாங் என்ற கிராமத்தில் விமானம் விழுந்தது கண்டறியப்பட்டுள்ளது. விமானத்தின் நிலை குறித்து இன்னும் தகவல் ஏதும் தெரியவிலை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே விமானத்தைத் தேடும் பணியில் நேபாள ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா

கேரளம்: கடும் வெயிலால் இருவா் உயிரிழப்பு

கோடை வெப்பத்தை சமாளிக்க நடவடிக்கைகள்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இறுதிக்கு வந்தது மோகன் பகான்

SCROLL FOR NEXT