உலகம்

ஆப்கனில் மாணவிகளைத் தாக்கி விரட்டியடித்த தலிபான்! (விடியோ)

ஆப்கன் பல்கலைக்கழகத்திற்கு வெளியே நின்றிருந்த மாணவிகளை தலிபான் ஒருவர் தாக்கும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஆப்கன் பல்கலைக்கழகத்திற்கு வெளியே நின்றிருந்த மாணவிகளை தலிபான் ஒருவர் தாக்கி விரட்டியடிக்கும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்  ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கும் மேல் ஆகிறது. தலிபான்கள் ஆட்சியில் மக்களுக்கு எதிராக பல கொடுமைகள் நடக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு கல்வி, வேலை என பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில் மாணவிகளை தலிபான் ஒருவர் தாக்கும் ஒரு விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கன் பல்கலைக்கழகத்திற்கு வெளியே நின்றிருந்த மாணவிகளை தலிபான் ஒருவர் அடித்து விரட்டியடிப்பது அந்த விடியோவில் பதிவாகியுள்ளது. 

முன்னதாக, ஹிஜாப் அணியாததால் மாணவிகள் பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் ஹிஜாப் அணிந்து அவர்கள் பல்கலைக்கழகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போதுதான் வெளியே இருந்த ஒரு தலிபான் மாணவிகளை அடிக்கச் சென்றுள்ளார். பின்னர் அவர் தலிபான் அரசின் நல்லொழுக்க அமைச்சகத்தின் அதிகாரி என்பது தெரிய வந்துள்ளது. 

இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாவதுடன் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT