உலகம்

ட்விட்டர் 'ப்ளூ டிக்' கணக்குகளுக்கு மாதம் ரூ.660 கட்டணம்: எலோன் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

DIN

ட்விட்டர் பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான 'ப்ளூ டிக்' வசதிக்கு மாதந்தோறும் ரூ.1,600 வசூலிக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இனி மாதம் ரூ.660 (8 டாலர்) கட்டணம் செலுத்த வேண்டும் என ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். 

பல மாத போராட்டத்துக்குப் பிறகு ட்விட்டரை கைப்பற்றிய எலோன் மஸ்க், பல்வேறு அதிரடியாக சில மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். 

அந்த வகையில் ட்விட்டரில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ப்ளூ டிக் முறைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஆலோச்சிக்குமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்ததாகவும், அந்த வகையில், அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான 'ப்ளூ டிக்' வசதிக்கு மாதந்தோறும் ரூ.1,600 வசூலிக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான 'ப்ளூ டிக்' வசதிக்கு மாதந்தோறும் ரூ.600 (8 டாலர்)வசூலிக்கப்படும், நீல நிற டிக்கிற்கு கட்டணம் இல்லை என அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளார் எலான் மஸ்க். 

இதுதொடர்பாக எலான் மஸ்க் வெளிட்டுள்ள பதிவில், ட்விட்டர் பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான 'ப்ளூ டிக்' வசதிக்கு இனி மாதந்தோறும் ரூ. 600 (8 டாலர்கள்) வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் பயனர்களுக்கு பதில்கள், குறிப்புகள் மற்றும் தேடல்களில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும், அதிக நேரங்கள் கொண்ட விடியோ மற்றும் ஆடியோள் பதிவிடும் வசதியும், பாதி விளம்பரங்கள் மட்டும் இருக்கும் வசதியும் வழங்கப்படும். இந்த கட்டணம் ப்ளூ டிக் வாங்கும் நாடுகளை பொறுத்து ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றவாறு கட்டணம் மாறுபடும். 

இந்த கட்டணம் மூலம் பெறப்படும் வருமானத்தால், சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு வெகுமதியாக பகிர்ந்து அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

தற்போது, ​​நீல நிற டிக்கிற்கு கட்டணம் இல்லை. கூடுதல் ஆவணங்களுடன் அனைத்து பயனர்களுக்கும் ட்விட்டர் வழங்கும் சரிபார்ப்பு படிவத்தை பயனர்கள் நிரப்ப வேண்டும். இதைத் தொடர்ந்து, ட்விட்டரில் உள்ள பிரத்யேக சரிபார்ப்புக் குழு பயனர் சமர்ப்பித்த அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, சரிபார்ப்பு அங்கீகரிக்கப்பட்டதா இல்லையா என்பதைத் தெரிவிக்கும்.

புளூ டிக் சரிபார்ப்புக்கான புதிய விலை எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை மஸ்க் இன்னும் அறிவிக்கவில்லை. ரூ.600 கட்டணத்தின் கீழ் அனைத்து அம்சங்களும் வழங்கப்படும் என்பதை அவர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. 

ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து நிறைய மாற்றங்களை கொண்டு வரும் எலோன் மஸ்க்,  பராக் அகர்வால், விஜயா காடே, நெட் செகல் மற்றும் சில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்பட சில உயர்மட்ட ட்விட்டர் நிர்வாகிகளை நீக்கினார். மேலும், கடந்த பல ஆண்டுகளாக நிறுவனத்தில் சட்ட மற்றும் கொள்கைத் தலைவராக இருந்த காடேவும் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT