கோப்புப்படம் 
உலகம்

ஐநா காலநிலை மாநாடு: ரிஷி சுனக் கலந்து கொள்வார் என அறிவிப்பு

அடுத்தவாரம் எகிப்தில் நடைபெற உள்ள ஐநா பருவநிலை மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

அடுத்தவாரம் எகிப்தில் நடைபெற உள்ள ஐநா பருவநிலை மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

காலநிலை மாற்ற பாதிப்புகள் சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமடைந்து வருகின்றன. இதனால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க மாற்று எரிசக்தி மூலங்களுக்கு மாற உலக நாடுகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இவற்றுக்கு மத்தியில் காலநிலை மாற்ற நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக எகிப்து நாட்டில் நவம்பர் 6ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ஐநாவின் காலநிலை மாற்ற மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்நிலையில் இந்த மாநாட்டில் பிரிட்டன் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த மாநாட்டில் கலந்து கொள்வதை ரிஷி சுனக் தவிர்க்கக்கூடும் என செய்திகள் வெளியான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக ரிஷி சுனக் தனது சுட்டுரைப் பக்கத்தில், “காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நீண்டகால இலக்குகளை அடைய முடியாது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களுக்கு முதலீடுகளை ஏற்படுத்தாமல் ஆற்றல் பாதுகாப்பை அடைய முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

SCROLL FOR NEXT