உலகம்

ஆய்வுக்காக குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பிகிறது சீனா!

DIN

விண்வெளியில் உள்ள சீன விண்வெளி நிலையத்திற்கு குரங்குகளை அனுப்பி அங்கு அதன் வளர்ச்சி மற்றும் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன என்பதை ஆய்வு செய்ய அந்நாடு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சந்திரன் அல்லது செவ்வாய் கிரகத்தைச் சுற்றி நீண்ட காலக் குடியேற்றத்திற்கு பல நாடுகள் திட்டமிட்டுள்ளதால், "இந்த சோதனைகள் அவசியம்" என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.  

பூஜ்ஜிய புவியீர்ப்புச் சூழலில் குரங்குகள் எவ்வாறு வளர்கின்றன மற்றும் இனப்பெருக்கம் செய்கின்றன என்பதை ஆய்வு செய்வதற்காக புதிதாக ஏவப்பட்டுள்ள டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு குரங்குகளை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

சீன விண்வெளி நிலையத்திற்கான அறிவியல் ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய சீன விஞ்ஞானிகளான ஜாங் லுவை மேற்கோள் காட்டி, சவுத் சைனா மார்னிங் போஸ்ட் விண்வெளி நிலையத்தின் மிகப்பெரிய தொகுதியில் சோதனை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இது முக்கியமாக மனிதர்கள் விண்வெளியில் வாழத் தேவையான கூற்றுகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

மீன் மற்றும் நத்தைகள் போன்ற சிறிய உயிரினங்களை சோதனை செய்த பிறகு, "எலிகள் மற்றும் குரங்குகள் சம்பந்தப்பட்ட சில ஆய்வுகளுக்காக அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  விண்வெளியில் அவை எவ்வாறு வளர்கிறது அல்லது  இனப்பெருக்கம் செய்கின்றன என்பதை ஆய்வு மேற்கொள்ளப்படும்" என்று ஜாங் கூறினார். மைக்ரோ கிராவிட்டி மற்றும் பிற விண்வெளி சூழல்களுக்கு ஒரு உயிரினத்தின் தழுவல் பற்றிய புரிதலை மேம்படுத்த இந்த சோதனைகள் உதவும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், எலிகள் மற்றும் விலங்கினங்கள் போன்ற சிக்கலான வாழ்க்கை வடிவங்களில் இதுபோன்ற ஆய்வுகளைச் செய்வதில் இன்னும் பல சிரமங்கள் இருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். பனிப்போர் காலத்தில் சோவியத் ஆராய்ச்சியாளர்கள் 18 நாள் விண்வெளிப் பயணத்தின் போது உடல்ரீதியான சவால்களைச் சமாளிக்கவும், சில எலிகள் இனப்பெருக்க வேலைகளில் ஈடுபட்டத்தை காண முடிந்தது. ஆனால், கர்ப்பத்திற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை, அதாவது பூமிக்குத் திரும்பிய பிறகு அந்த எலிகளில் எதுவும் குழந்தை பெற்றெடுக்கவில்லை.

புவியீர்ப்பு இல்லாததால் பிற இனப்பெருக்க உறுப்புகள் பாதிக்கப்படலாம், இது சோதனை விலங்குகளின் பாலின ஹார்மோனில் குறிப்பிடத்தக்க சரிவுக்கு வழிவகுக்கும் என்று சில முந்தைய தரை சோதனைகள் பரிந்துரைத்தன என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

ஆனால், பெரிய விலங்குகள், குறிப்பாக குரங்குகள், மனிதர்களுடன் அதிக ஒற்றுமையைப் பகிர்ந்துகொள்வதால், மேலும் பல நாடுகள் சந்திரன் அல்லது செவ்வாய் கிரகத்தைச் சுற்றி நீண்ட காலக் குடியேற்றத்தைத் திட்டமிடுவதால், "இந்த சோதனைகள் அவசியம்" என்றும் சிங்குவா பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை பேராசிரியர் கெஹ்கூய் கீ கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT