உலகம்

நவம்பர் 15ல் மிக முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன்: டொனால்ட் டிரம்ப்

ANI

ஓஹியோ: நவம்பர் 15ஆம் தேதி மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போகிறேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு, 2024ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் நடைபெறும் அதிபர் போட்டியில் இவர் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இது குறித்து ஓஹியோவில் கூடியிருந்த ஏராளமான மக்களிடையே பேசிய டொனால்ட் டிரம்ப், நவம்பர் 15ஆம் தேதி ஃப்ளோரிடாவில் உள்ள பால்ம் கடற்கரையில், மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போகிறேன் என்று தெரிவித்தார்.

அமெரிக்க தொழிலதிபரான டிரம்ப், குடியரசு கட்சி வேட்பாளராக கடந்த 2016-ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டு அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றாா். 

அடுத்து, 2020-ஆம் ஆண்டு அதிபா் தோ்தலிலும் குடியரசு கட்சி சாா்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினாா். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த டிரம்ப், தோ்தலில் மோசடி நடந்துள்ளது எனக் குற்றஞ்சாட்டி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தினாா். 

அவருடைய ஆதரவாளா்களும் அமெரிக்க வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். பெரும் சா்ச்சைக்கு இடையே, 2021 ஜனவரி 20-ஆம் தேதியன்று ஜோ பைடன் அமெரிக்காவின் 46-ஆவது அதிபராகப் பதவியேற்றாா். இவருடைய 4 ஆண்டு அதிபா் பதவிக் காலம் 2025 ஜனவரியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த அதிபா் தோ்தல் 2024-ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT