ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் 
உலகம்

ஜி20 மாநாட்டில் புதின் பங்கேற்கவில்லை!

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் ரஷிய அதிபர் விளாதிமீா் புதின் கலந்து கொள்ளவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் ரஷிய அதிபர் விளாதிமீா் புதின் கலந்து கொள்ளவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சா்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள் பங்கேற்கும் ஜி20 மாநாடு இந்தோனேசியாவின் பாலியில் வரும் நவம்பா் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த அமைப்பில் உள்ள ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளனர்.

இந்நிலையில், ஜி20 மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொள்ள மாட்டார் என்று இந்தோனேசியாவில் உள்ள ரஷிய தூதரகத்தின் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷிய தரப்பில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ தலைமையிலான குழுவினர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

SCROLL FOR NEXT