உலகம்

இந்திய-அமெரிக்க வெளியுறவு அமைச்சா்கள் சந்திப்பு

DIN

கம்போடியாவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனை இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை சந்திதாா்.

கம்போடியா தலைநகா் நாம் பெனில் கடந்த சனிக்கிழமை 19-ஆவது ஆசியான்-இந்தியா மாநாடு, ஞாயிற்றுக்கிழமை 17-ஆவது கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவை நடைபெற்றன. அவற்றில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கம்போடியா சென்றாா். அவருடன் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரும் சென்றாா்.

அங்கு அமெரிக்க அமைச்சா் ஆன்டனி பிளிங்கனை ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். அப்போது பிளிங்கனுடன் உக்ரைன் போா், இந்தோ-பசிபிக் விவகாரம், எரிசக்தி, ஜி20 மாநாடு, இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு ஆகியவை குறித்து விவாதித்ததாக ஜெய்சங்கா் ட்விட்டரில் பதிவிட்டாா்.

ஆன்டனி பிளிங்கன் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள், ரஷியா-உக்ரைன் போரால் ஏற்படும் விளைவுகளைத் தணிப்பது ஆகியவை குறித்து ஜெய்சங்கருடன் விவாதித்தேன். ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்பதை அமெரிக்கா ஆதரிக்கிறது’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! இன்றைய நிலவரம்!

காஸாவில் இனப்படுகொலை? இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்கா

விராலிமலையில் ஒரே நாளில் 98 மி.மீ. மழை பதிவு!

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

SCROLL FOR NEXT