உலகம்

சயனைடை விட 6000 மடங்கு கொடிய நச்சுத் தாவரம் பூங்காவில் வளர்ப்பு!

சயனைடை விட 6,000 மடங்கு அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரத்தை இங்கிலாந்தில் உள்ள பூங்காவில் வளர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

DIN

சயனைடை விட 6,000 மடங்கு அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரத்தை இங்கிலாந்தில் உள்ள பூங்காவில் வளர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

'ரிசினஸ் கம்யூனிஸ்' என்று அழைக்கப்படும் இந்த தாவரம் ஆமணக்கு வகையை  சேர்ந்தது. உலகின் மிக நச்சுத்தன்மை வாய்ந்த தாவரமாக கின்னஸ் புத்தகத்தில் பெயரிடப்பட்டது.

இங்கிலாந்தின் கொல்வின் விரிகுடாவில் உள்ள குயின்ஸ் கார்டன்ஸ் பூங்காவில் 'ரிசினஸ் கம்யூனிஸ்' தாவரம் இருப்பதை பெண்மணி ஒருவர் பார்த்து செல்போனில் படம் பிடித்து, தனது கணவருக்கு அனுப்பி உள்ளார்.  அப்பெண்ணின் கணவர் அந்த தாவரத்தின் நச்சுத்தன்மையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த தாவரங்களை கையுறைகளால் கையாள வேண்டும். 'ரிசினஸ் கம்யூனிஸ்' தாவரத்தின் விதைகளின் நுகர்வு மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறினார்.

பின்பு, அவர் பூங்கா நிர்வாகத்தை தொடர்புகொண்டு அந்த தாவரத்தை அகற்றுமாறும், எச்சரிக்கைப் பலகைகளை நிறுவுமாறு பரிந்துரைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT