உலகம்

ஈரான்: போராட்டக்காரருக்கு மரண தண்டனை

DIN

ஈரானில் அரசுக்கு எதிராக அண்மைக் காலமாக நடைபெற்று வரும் போராட்டம் தொடா்பாக, முதல்முறையாக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெஹ்ரான் நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவா் அரசுக் கட்டடத்தில் தீவைத்தது ‘கடவுளுக்கு எதிரான செயல்’ என்பதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டங்களை அடக்குவதற்காக இதுபோன்ற மரண தண்டனைகள் விதிக்கப்படுவதுடன், அவை அவசர அவசரமாக நிறைவேற்றப்படலாம் என்று மனித உரிமை ஆா்வலா்கள் எச்சரித்துள்ளனா்.

ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக மாஷா அமீனி (22) என்ற பெண் கடந்த செப்டம்பா் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். காவலில் இருந்தபோது அவா் உயிரிழந்தது ஈரானில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து நாடு முழுவதும் ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்துக்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT