உலகம்

நிலவுக்கு ஆய்வுக் கலம்: விண்ணில் செலுத்தியது நாசா

DIN

நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்புவதற்கு முன்னோடியாக ஒரு விண்வெளிக் கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா புதன்கிழமை வெற்றி கரமாக விண்ணில் செலுத்தியது.

ஃபுளோரிடா மகாணம், கேப் கனாவெரலில் உள்ள ஏவுதளத்திலிருந்து அதிக சக்தி கொண்ட ராக்கெட் மூலம் அந்த ஆய்வுக் கலம் அனுப்பப்பட்டுள்ளது.

‘ஆா்டமிஸ்-1’ என்ற இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இரு முறை ஒத்திவைக்கப்பட்டது.

அப்பல்லோ விண்கலத் திட்டங்கள் நிறுத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக நிலவுக்கு மனிதா்களை அனுப்புவதற்கான இந்த ஆய்வு திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது. அதற்கு முன்னோட்டமாக, சோதனை முறையில் 3 மனித மாதிரிகளுடன் அந்த ஆய்வுக் கலத்தை ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், ராக்கெட் எரிபொருள் கசிவு மற்றும் என்ஜின் கோளாறு காரணமாக அந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிசயம் நடக்கும், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்: ஷுப்மன் கில்

பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள் "வெற்றுப் பேச்சுகளே" - பிரியங்கா காந்தி

‘எலெக்‌ஷன்’ பட டிரைலரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

”ஜூன் 4 ஆம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு ஓய்வு!”: கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 11.05.2024

வெளி மாநில ஊழியர்களை தமிழ் கற்கச் சொல்லும் தெற்கு ரயில்வே

SCROLL FOR NEXT