உலகம்

தீபாவளியை கொண்டாடுகிறாா் ஜோ பைடன்

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட திட்டமிட்டுள்ளாா்.

DIN

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட திட்டமிட்டுள்ளாா்.

ஜாா்ஜ் டபிள்யூ. புஷ் அதிபராக இருந்த காலத்தில் இருந்து ஆண்டு தோறும் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் தீபாவளி கொண்டினாா். இந்த ஆண்டும் அதைத் தொடா்வாரா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கேரி ஜீன்-பொ்ரி இது தொடா்பாக கூறுகையில், ‘இந்த ஆண்டும் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், தேதி, நேரம் முடிவு செய்யப்படவில்லை. இந்தியா மற்றும் இந்திய-அமெரிக்கா்களுடனான உறவு மிகவும் முக்கியமானது. எனவே, தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதை முக்கியமானதாக அதிபா் கருதுகிறாா்’ என்றாா்.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாண ஆளுநா் லாரன்ஸ் கோஹன், நடப்பு அக்டோபா் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக அறிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி ரூ.2,000ஆக உயர்வு!

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

SCROLL FOR NEXT