வழக்கமாக ஏடிஎம்களில் குளுகுளுவென குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். ஆனால், ஒரு வங்கியின் ஏடிஎம் மையமே குளுகுளு வென பனிமலைகளுக்கு இடையே இயங்கி வருகிறது.
பாகிஸ்தான் - சீனா எல்லைப் பகுதியில், பாகிஸ்தானின் வடக்கு கில்ஜித் பால்டிஸ்தான் மாகாணத்தில் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. மீண்டும் ஒரு சுவாதியா? ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை: இளைஞர் கைது
உலகின் மிக உயரமான இடத்தில் இயங்கி வரும் ஏடிஎம் மையம் என்ற பெருமையையும் இந்த குளுகுளு ஏடிஎம் மையம் பெற்றுள்ளது. பாகிஸ்தானில் இயங்கி வரும் பிஎன்பி வங்கி, தனது தொழில்நுட்ப புரட்சியைக் காட்ட, கடல்மட்டத்திலிருந்து 15,397 அடி உயரத்தில் மலைச் சிகரத்தின் உச்சியில் ஏடிஎம் மையத்தை நிறுவியுள்ளது.
அவ்வப்போது ஏடிஎம் இயந்திரம் இயங்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், ஏடிஎம் மையம் சூரிய ஒளியால் இயங்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டிய ஏடிஎம் இயந்திரம், மற்ற ஏடிஎம் இயந்திரங்களைப் போலவே நன்றாக செயல்படுகிறது. இங்கு வருவோர் ஏடிஎம்-மில் பணமெடுக்கிறார்களோ இல்லையோ மறக்காமல், ஏடிஎம் முன் நின்று தற்படம் எடுத்துக் கொள்ள மறப்பதேயில்லையாம்.
அது மட்டுமல்ல, இந்தப் பகுதி பாகிஸ்தான் மக்களின் சுற்றுலா தளமாகவும் இருப்பதால், சுற்றுலா பயணிகளுக்கும் அங்கிருக்கும் ஒரு சில மக்களுக்கும் இந்த ஏடிஎம் பேருதவியாக உள்ளது.
உங்களுக்கு எப்போதாவது குளுகுளுவென பணத்தைத் தொட்டுப்பார்க்க ஆசைவந்தால் இந்த ஏடிஎம் மையத்துக்குச் செல்லலாம் என்று பலரும் கூறிவருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.