முகப்பு
உலகம்

அமெரிக்காவில் காவலர் உள்பட 5 பேர் சுட்டுக்கொலை: சிறுவன் கைது

அமெரிக்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

Updated On : 14 அக்டோபர், 2022 at 11:39 AM
பகிர்:

அமெரிக்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பலியான சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், நேற்று(வியாழக்கிழமை)  அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த  ராலெக் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி உள்பட 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Advertisement

இதைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுப்பட்ட 18 வயது நிரம்பாத சிறுவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், சிறுவனுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதா என்கிற கோணத்திலும் காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.