முகப்பு
உலகம்

கனடாவில் கைத்துப்பாக்கிகள் விற்பனைக்குத் தடை!

கனடாவில் கைத் துப்பாக்கிகளின் விற்பனை, கொள்முதலுக்கு தடை விதித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

கனடாவில் கைத்துப்பாக்கிகளின் விற்பனை, கொள்முதலுக்கு தடை விதித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார். 

கனடாவில் துப்பாக்கி வன்முறையைக் குறைப்பதற்கு அந்த நாட்டு அரசு சமீபத்தில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு முக்கிய நடவடிக்கையாக கனடாவில் கைத்துப்பாக்கி விற்பனை, கொள்முதல் மற்றும் பரிமாற்றங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று(வெள்ளிக்கிழமை) முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது. 

இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 'கனடா முழுவதும் துப்பாக்கி வன்முறை அதிகரித்து வருவதால், நம் சமூகத்திலிருந்து இந்த கொடிய ஆயுதங்களை அகற்ற அவசர நடவடிக்கை எடுப்பது எங்கள் கடமை. துப்பாக்கியால் ஏற்படும் வன்முறையை நாட்டில் அனுமதிக்க முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார். 

கனடா அரசின் இந்த புதிய உத்தரவுப்படி, கனடா மக்கள் அந்த நாட்டிற்குள் இனிமேல் கைத் துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது, மேலும், புதிதாக வாங்கிய கைத்துப்பாக்கிகளை நாட்டுக்குள் கொண்டு வரவோ முடியாது.

கடந்த 40 ஆண்டுகளில் கனடாவில் துப்பாக்கிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கை இதுவாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.