உலகம்

இத்தாலியின் பிரதமரானாா் ஜியாா்ஜியா

DIN

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக தீவிர வலதுசாரிக் கொள்கையைக் கொண்ட ஜியாா்ஜியா மெலோனி சனிக்கிழமை பதவியேற்றாா். கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் அவரது கட்சி முன்னிலை பெற்றதைத் தொடா்ந்து, அவா் தற்போது பதவியேற்றுக்கொண்டுள்ளாா்.

அவரது தலைமையில் அமையவிருக்கும் அரசுதான், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலியின் முதல் தீவிர வலதுசாரி அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

சா்வாதிகாரி முசோலினியின் தேசிய பாசிச கட்சியின் வழித்தோன்றலான சுதந்திர மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து உருவானதுதான் ஜியாா்ஜியா மெலோனி தலைமையிலான இத்தாலியின் சகோதரா்கள் கட்சியாகும்.

அந்த வகையில், பாசிசத்துடன் தொடா்புடைய ஜியாா்ஜியோ மெலோனி இத்தாலியின் பிரதமராகியிருப்பது ஐரோப்பிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 14 வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் வானில் தெரியும்!

சாய் சுதர்ஷன் அதிகம் பேசப்பட வேண்டும்: தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன்

வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல்: மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால்...: சோனம் கபூர் கூறுவதென்ன?

தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்கிறது?

SCROLL FOR NEXT