உலகம்

400 ஈரான் டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

DIN

ஈரானின் 400 டிரோன்களை கொண்டு உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

உக்ரைன் மீது கடந்த 8 மாதங்களுக்கு மேலாக ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவோடு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதற்கிடையே ரஷியா- கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் வகையில் ரஷியாவால் கட்டப்பட்ட கொ்ச் தரைப் பாலம் அண்மையில் குண்டு வைத்து தகா்க்கப்பட்டது. இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியது.

ஆளில்லா டிரோன்கள் மூலம் உக்ரைனின் முக்கியப் பகுதிகளில் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் அக்டோபர் 17ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட்-136 காமிகேஸ் வகை 400 டிரோன்கள் மூலம் உக்ரைனின் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக அதிபர் ஸெலென்ஸ்கி  புதன்கிழமை குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT