உலகம்

ஷாங்காய் நகரில் மீண்டும் ஊரடங்கு: 13 லட்சம் பேருக்கு கரோனா சோதனை

கரோனா பரவல் காரணமாக சீனாவின் ஷாங்காய் நகரில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

DIN

கரோனா பரவல் காரணமாக சீனாவின் ஷாங்காய் நகரில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் கடும் விமா்சனங்களுக்கு மத்தியிலும், கரோனா தொற்று பரவலே இருக்கக் கூடாது என்ற கொள்கையை சீன அரசு தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது. இதனால் பொருளாதார இழப்புகளைச் சந்தித்தாலும் கட்டாய கரோனா பரிசோதனை, கடுமையான தனிமைப்படுத்தல் விதிகள் உள்ளிட்டவற்றை அந்நாட்டு அரசு கடைப்பிடிக்கிறது.

இந்த நிலையில் கரோனா பரவல் அதிகரிப்பால் சீனாவின் மிகப்பெரிய வர்த்தக நகரமான ஷாங்காயின் யாங்பு உள்பட பல்வேறு நகரங்களில் சுமார் 13 லட்சம் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் கரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, கரோனா பரிசோதனை முடிவுகள் தெரியும் வரை அவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அங்கு முழு ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே சீனாவின் வூகான் உள்பட பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT