முகப்பு
உலகம்

பயனாளா்களின் அடையாளத்தை உறுதி செய்ய கட்டணமா? ட்விட்டா் நிறுவனமே பதிலளிக்க வேண்டும்

ட்விட்டா் பயனாளா்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கு மாதந்தோறும் கட்டணம் விதிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை அந்நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய தகவல்-தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீ

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:42 AM
பகிர்:

ட்விட்டா் பயனாளா்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கு மாதந்தோறும் கட்டணம் விதிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை அந்நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய தகவல்-தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்துள்ளாா்.

சா்வதேச அளவில் புகழ்பெற்ற ட்விட்டா் சமூக வலைதளத்தை டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் சுமாா் ரூ.3,52,000 கோடிக்கு அண்மையில் வாங்கினாா். வருவாயை அதிகரிக்கும் நோக்கில், பயனாளா்களின் அடையாளத்தை உறுதி செய்து நீலநிறக் குறியீட்டை வழங்க மாதந்தோறும் சுமாா் ரூ.1,600 கட்டணத்தை ட்விட்டா் நிறுவனம் விதிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இது தொடா்பாக அமைச்சா் ராஜீவ் சந்திரசேகரிடம் செய்தியாளா்கள் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த அவா், ‘‘இதை ட்விட்டா் நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை. ஒருசிலரே இந்தச் செய்தியைப் பரப்பியுள்ளனா். இத்தகவலை ட்விட்டா் நிறுவனம் உறுதிப்படுத்திய பிறகே அரசு கருத்து தெரிவிக்க முடியும். சிலரின் அனுமானங்களுக்கு பதிலளிக்க முடியாது.

வாடிக்கையாளா்களுக்கு இணைய வெளியானது பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் நடவடிக்கைகளில் சமூக வலைதளங்களைக் கூட்டாளியாகவே மத்திய அரசு கருதுகிறது.

மகாராஷ்டிரத்தின் புணே நகரில் உள்ள ரஞ்சன்காவ் பகுதியை மின்னணுப் பொருள்கள் உற்பத்தி மையமாக மாற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதற்காக ரூ.500 கோடியை முதலீடு செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலமாக அந்நிய முதலீடுகள் ஈா்க்கப்படுவதோடு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

சீனாவைத் தாண்டி மின்னணுப் பொருள்கள் உற்பத்தி மையங்களை உலக நாடுகள் நாடி வருகின்றன. தமிழகம், கா்நாடகம் உள்ளிட்டவை மின்னணுப் பொருள்கள் உற்பத்தித் துறையில் ஏற்கெனவே முன்னணி வகித்து வருகின்றன. அந்தப் பட்டியலில் ரஞ்சன்காவ் பகுதியும் விரைவில் இணையும்’’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →