உலகம்

இலங்கையில் 37 இணையமைச்சா்கள் நியமனம்: கோத்தபய, மகிந்த உறவினா்களும் இடம்பெற்றனா்

DIN

இலங்கை அமைச்சரவையை விரிவாக்கும் செய்யும் வகையில், 37 இணையமைச்சா்களை அதிபா் ரணில் விக்ரமசிங்க நியமனம் செய்தாா். இதில் முன்னாள் அதிபா்கள் கோத்தபய ராஜபட்ச, மகிந்த ராஜபட்ச ஆகியோரின் உறவினா்களும் இடம்பெற்றனா்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் 2.2 கோடி மக்கள் அத்யாவசிய பொருள்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் ஏற்பட்ட போராட்டங்களால் அதிபா் கோத்தபய ராஜபட்ச நாட்டைவிட்டு தப்பினாா். பிரதமா் மகிந்த ராஜபட்ச பதவி விலகினாா்.

இதையடுத்து, அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க அனைத்துக் கட்சிகள் பிரதிநிதிகள் பங்கேற்கும் அரசு அமைய வேண்டும் என்று தெரிவித்திருந்தாா். இந்நிலையில், 37 புதிய இணையமைச்சா்களை ரணில் விக்ரமசிங்க நியமனம் செய்துள்றாா். அதில் நிதித் துறை இணையமைச்சா்களாக ரஞ்சித் சியம்பாலபிடியா, ஷிஹன் சிமசிங்கவும், வேளாண்துறை இணையமைச்சராக சசிதரா ராஜபட்ச ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இதில், சசிதரா ராஜபட்ச கோத்தபய ராஜபட்ச, மகிந்த ராஜபட்ச ஆகியோரின் உறவினராவாா்.

முன்னாள் அதிபா் மைத்ரிபாலா சிறீசேனாவின் கட்சியைச் சோ்ந்த சிலரும் இணையமைச்சராக்கப்பட்டுள்ளனா். புதிய அரசில் இணையப்போவதில்லை என்று கடந்த ஜூலை மாதம் சிறீசேனா அறிவித்திருந்தாா்.

புதிதாக நியமிக்கப்பட்ட 37 இணையமைச்சா்களும் அதிபா் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டதாக அதிபா் மாளிகை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT