ஆர்டெமிஸ் விண்கலம் 
உலகம்

’ஆர்டெமிஸ்' விண்ணில் ஏவப்படும் நாள் மீண்டும் ஒத்திவைப்பு

தொழில்நுட்பம் மற்றும் எரிபொருள் நிரப்பும் பிரச்னை காரணமாக ஆர்டெமிஸ் விண்கலத்தை ஏவுவதற்கான பணிகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

DIN

தொழில்நுட்பம் மற்றும் எரிபொருள் நிரப்பும் பிரச்னை காரணமாக ஆர்டெமிஸ் விண்கலத்தை ஏவுவதற்கான பணிகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

நிலவுக்கு மீண்டும் வீரர்களை அனுப்பும் முயற்சியாக ஆர்டெமிஸ் எனப் பெயரிடப்பட்ட திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது.

கடந்த 1969 ஆம் ஆண்டு முதல்முறையாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை அப்போலோ திட்டத்தின் மூலம் நாசா அனுப்பியது. 2019-ஆம் ஆண்டு அதன் 50 ஆண்டுகள் நிறைவை ஒட்டி 'ஆர்டெமிஸ்' திட்டத்தை தொடங்கியது குறிப்பிட்டத்தக்கது.

இந்த பிரமாண்ட திட்டத்தின்படி ராக்கெட்டை ஆகஸ்ட் 29-ஆம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எரிபொருள் நிரப்பும் போது கசிவு கண்டறியப்பட்டதால் கடைசி நேரத்தில் ஆர்டெமிஸ் ராக்கெட் திட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டது.

பின், ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறை சீர்செய்யப்பட்டதும் செப்.3 ஆம் தேதி மீண்டும் விண்ணில் ஏவத் தயாராக இருந்தநிலையில், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் எரிபொருள் நிரப்புவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஆர்டெமிஸ் விண்கலத்தை ஏவுவதற்கான பணிகள் இறுதி நேரத்தில்  நிறுத்திவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வருகிற 23 ஆம் தேதி ‘ஆர்டெமிஸ்’ விண்ணில் ஏவப்படும் என நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக அக்டோபர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT