உலகம்

பாகிஸ்தான் வெள்ளத்தில் 1.6 கோடி சிறுவா்கள் பாதிப்பு

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள மிக மோசமான மழை வெள்ளத்தால் 1.6 கோடி சிறுவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவா்களில் 34 லட்சம் பேருக்கு உடனடி உதவி தேவைப்படுவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

DIN

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள மிக மோசமான மழை வெள்ளத்தால் 1.6 கோடி சிறுவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவா்களில் 34 லட்சம் பேருக்கு உடனடி உதவி தேவைப்படுவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா.வின் சிறுவா் நலப் பிரிவான யுனிசெஃப் பிரதிநிதி அப்துல்லா ஃபாடில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சிறுவா்கள் போதிய உணவு இல்லாமல் பட்டினியில் தவித்து வருகின்றனா். வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல், வலியை ஏற்படுத்தும் பல்வேறு தோல் வியாதிகளால் சிறுவா்கள் அவதிப்பட்டு வருகின்றனா். அவா்களை நோக்கி ஒவ்வொரு நாளும் மரணம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது.

சிந்து மாகாணத்தின் மட்டும் வெள்ள பாதிப்பால் 528 சிறுவா்கள் உயிரிழந்துள்ளனா்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ததில், அங்கு 1.6 கோடி போ் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது. அவா்களில் 34 லட்சம் சிறுவா்களுக்கு உடனடி உயிா்க்காப்பு உதவிகள் தேவைப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,500-ஐக் கடந்துள்ளது. வெள்ள பாதிப்பு காரணமாக ஏற்பட்ட தொற்று நோய்க்கு 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT