உலகம்

எலிசபெத் ராணியின் இறுதி ஊர்வலம் பாதுகாப்பு சவால்கள் நிறைந்தது: லண்டன் மேயர்

DIN

எலிசபெத் மகாராணியின் இறுதி ஊர்வலம் பாதுகாப்பு சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என லண்டன் மேயர் ஷாதிக் கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேயர் ஷாதிக் கான் கூறியிருப்பதாவது: “ மகாராணி எலிசபெத் அவர்களின் இறுதி ஊர்வலம் மிகப் பெரிய அளவில் நடைபெற உள்ளது. மத்திய லண்டனில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சவாலனதாக இருக்கும். பல்வேறு நாடுகளில் இருந்தும் 500க்கும் அதிகமான முக்கியத் தலைவர்கள் பலரும் மகாராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கின்றனர். பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்வதால் நாங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகிறோம். இந்த இறுதி ஊர்வலத்தில் உலகத் தலைவர்கள் மீது கெட்ட எண்ணம் கொண்டவர்கள் தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம். காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் தங்களது கடின உழைப்பை பாதுகாப்பு பணிகளுக்காக அளித்து வருகின்றனர். முன்னாள் மார்ஷல்கள் பலரும் தன்னார்வலர்களாக இந்த இறுதி ஊர்வல பாதுகாப்புப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

லண்டன் நகரின் பல பகுதிகளிலும் உயர் கோபுரங்கள் அமைத்து காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தெருக்களில் உள்ள குப்பைத் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் வடிநீர் குழாய்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளன. குதிரையின் மீது அமர்ந்து காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இறுதி ஊர்வலம் நடைபெறும் பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

மகாராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் நாளை (செப்டம்பர் 19) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT