உலகம்

பிரிட்டன் அரசர் சார்லஸ் காரின் மீது மோத வந்த இளைஞர்!

DIN


பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸ் காரின் மீது இளைஞர் ஒருவர் ஸ்கேட்டிங் செய்துகொண்டு மோத வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பிரிட்டன் அரசி மறைந்த இரண்டாம் எலிசபெத் உடல் வைக்கப்பட்டுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு அவரின் மகனும், அரசருமான மூன்றாம் சார்லஸ் காரில் அணிவகுத்து சென்றுகொண்டிருந்தார்.

இரு வழிநெடுகிலும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையையொட்டிய சாலைகளில் பொதுமக்கள் வழிநெடுகிலும் அரசி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் காத்திருந்தனர். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், சாலையின் குறுக்கே ஸ்கேட்டிங் செய்துகொண்டு வேகமாக வந்த இளைஞர், அரசர் மூன்றாம் சார்லஸ் வந்துகொண்டிருந்த காரின் மீது மோத வந்தார். எனினும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். அரசரின் அணிவகுப்பு எந்தவித இடையூறுமின்றி சென்றது. 

இதனை அஞ்சலி செலுத்த கூட்டத்தில் இருந்த ஒருவர் விடியோ எடுத்துள்ளார். அந்த விடியோ தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT