உலகம்

குளோனிங் முறையில் உலகின் முதல் ஓநாய்: விஞ்ஞானிகள் சாதனை

குளோனிங் மூலம் உலகின் முதல் ஓநாயை உருவாக்கி  விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

DIN

குளோனிங் மூலம் உலகின் முதல் ஓநாயை உருவாக்கி  விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தைச் சேர்ந்த சினோஜிங் பயோடெக்னாலஜி நிறுவனம் குளோனிங் முறையில் உலகின் முதல் ஆர்ட்டிக் ஓநாயை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

பெண் நாயின் அணுக்கருக்கள் மற்றும் ஆர்ட்டிக் பிரதேசத்தில் வாழும் பெண் ஓநாயின் சோமாடிக் செல்களை இணைத்து அவற்றிலிருந்து புதிய கருக்களை உருவாக்கி வாடகைத் தாய் முறையில் இந்த ஓநாய் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 10 ஆம் தேதி பிறந்த இந்த ஓநாய் 100 நாள்களைக் கடந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், உலகின் முதல் குளோனிங் ஓநாயான இதற்கு  ‘மாயா’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.

குளோனிங் என்பது கலவியில்லா இனப்பெருக்க முறையாகும். இதுவரை பல்வேறு உயிரனங்களை விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் உருவாக்கியுள்ளது  குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலூர் சிப்காட் ஆலையில் ரசாயன கசிவு! 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓணம் அல்டிமேட்... ஐஸ்வர்யா தேவன்!

ஓணம் சேச்சி... சாதிகா!

ஓணம் பாரம்பரியம்... மௌனி ராய்!

கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

SCROLL FOR NEXT