ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களால் மக்கள் அதிர்ச்சி  
உலகம்

ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களால் மக்கள் அதிர்ச்சி 

ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையோரம் 230க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதால் இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

DIN

ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையோரம் 230க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதால் இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

ஆஸ்திரேலியாவின் தீவில் கடந்த திங்கள்கிழமை 14 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருந்தன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக புதன்கிழமை மேற்கு கடற்கரைப் பகுதியில் 230க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இருப்பது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் உயிருடன் இருப்பதால் அவற்றை பத்திரமாக கடலில் விட இயற்கைவளம் மற்றும் சுற்றுச்சுழல் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

உணவு தேடி புதிய இடத்திற்கு வந்த திமிங்கலங்களின் உடல்நிலை பாதிப்பால் கரை ஒதுங்கியிருக்கலாம் எனவும் எனினும் இதுவரை உறுதியான காரணங்கள் கண்டறியப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக 470 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு மாத கால தூய்மை இயக்கத்தை தொடங்கியது தில்லி அரசு

தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு: மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

டிரம்ப்புக்கு நோபல் பரிசு: வெள்ளை மாளிகை வலியுறுத்தல்

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு!

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி அமைச்சரிடம் மனு

SCROLL FOR NEXT