உலகம்

எலிசபெத் ராணியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட டென்மார்க் ராணிக்கு கரோனா

DIN

டென்மார்க் ராணி இரண்டாம் மார்கரெத் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் டென்மார்க் நாட்டின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
 

இது குறித்து டென்மார்க் அரண்மனை சார்பில் கூறியதாவது: “ ராணி கரோனாவால் பாதிக்கப்படிருப்பது நேற்று (செப்டம்பர் 21) உறுதியானது. அவர் தற்போது ஃப்ரெடென்ஷ்பார்க் அரண்மனையில் உள்ளார். கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் ராணியின் இந்த வார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.

82 வயதான டென்மார்க் நாட்டின் ராணி மார்கரெத், ராணி எலிசபெத் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு திரும்பிய பிறகு கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டில் ராணி மார்கரெத் இரண்டாவது முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ராணி எலிசபெத்திற்கு பிறகு ஐரோப்பாவின் மிக நீண்ட காலம் ஆட்சியில் இருப்பவர்களில் ராணி மார்கரெத் இரண்டாவது இடத்தில் இருந்தார். எலிசபெத் மறைவுக்குப் பின்னர் ஐரோப்பாவின் மிக நீண்டகால ஆட்சியில் இருப்பது ராணி மார்கரெத் ஆவார்.

82 வயதான ராணி மார்கரெத் அரியணையேறி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் கடந்த 1972ஆம் ஆண்டு அவரது தந்தை ஃபெரெடரிக் மறைவுக்குப் பிறகு தனது 31வது வயதில் அரியணை ஏறினார். அவர் அரியணையில் அமர்ந்ததற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. இருப்பினும், டென்மார்க்கின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் இன்றியமையாதவை.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ராணி மார்கரெத் அரியணையேறி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றன. கரோனா பரவலின் காரணத்தினால் அரியணையேறி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கான கொண்டாட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT