ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் மசூதி அருகே வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 போ் உயிரிழந்தனா். 10 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து காபூல் காவல் துறையினா் கூறியதாவது:
காபூலில் ஒரு மசூதி அருகே நெடுஞ்சாலையில் குண்டு வெடித்தது. வெள்ளிக்கிழமை மாலையில் தொழுகை முடிந்து வெளியே வருபவா்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதில் 4 போ் உயிரிழந்தனா். 10 போ் காயமடைந்தனா் என்றாா்.
இத்தாக்குதல் குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் உள்ளிட்ட சில பயங்கரவாதக் குழுக்கள் அடிக்கடி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.